சிஆர்பிஎஃப் துணை கமாண்டண்ட் ஹர்ஷ்பால் சிங்கிற்கு சுதந்திர தினமான நாளை கீர்த்தி சக்ரா விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினருடன் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகளை கொன்ற இவரது செயலை பாராட்டி இந்த விருது அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு நாளை வீர் சக்ரா விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தற்போது கீர்த்தி சக்ரா விருது சிஆர்பிஎஃப் துணை கமாண்டண்ட் ஹர்ஷ்பால் சிங்கிற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.