மத்திய விளையாட்டுத்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்ட வீடியோ ஒன்று, பலரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு, பலரும் அதனைகிண்டல் செய்தும் வருகின்றனர்.
கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளஒரு வீடியோவில் இளைஞர் ஒருவர் அணிந்திருக்கும் ஜீன்ஸ் பேன்டின் பின்பக்கத்தில் நூற்றுக்கணக்கான தேனீக்கள் ஒன்றுசேர்ந்து கூடு அமைத்துள்ளது. இந்த வீடியோவுக்கான கேப்சனில், தேனீக்களின் கூடானது விரும்பத்தகாத இடத்தில் உள்ளது. ஆனால் இது நாகாலாந்தில் மட்டுமே நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்த ட்வீட்டை பார்த்த இணையவாசிகள், இது எப்படி என வியப்புடன் கேள்வி எழுப்பியும், அந்த வீடியோவையோ கிண்டல் செய்தும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.