கிரண்பேடி பதவி நீக்கம் - நாராயணசாமி வரவேற்பு!

ுபர

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ச்சியாக ஆளாகி வந்த புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த புதுவை துணைநிலை ஆளுநர் பதவியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை கூடுதலாகக் கவனிப்பார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கிடையே ஆளுநரின் பதவி நீக்கத்தை அம்மாநில எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியினர் வரவேற்றுள்ளார்கள். இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் நாராயணசாமி, "புதுச்சேரி மக்களின் உணர்வுகளை மதிக்காமல் கிரண்பேடி தன்னிச்சையாகச் செயல்பட்டார்.எங்களின் தொடர் போராட்டத்திற்குப்பின் கிரண்பேடியை மாற்றியதை வரவேற்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

v. narayanasamy
இதையும் படியுங்கள்
Subscribe