பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ச்சியாக ஆளாகிவந்த புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த புதுவை துணைநிலை ஆளுநர் பதவியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை கூடுதலாகக் கவனிப்பார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கிடையே ஆளுநரின் பதவி நீக்கத்தை புதுவை எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி வரவேற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுநருக்கும், புதுவை அரசுக்கும் கடும் மோதல் போக்கு நிலவிவந்தது குறிப்பிடத்தக்கது.