உறங்கிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது ஏறிய ரோடு-ரோல்லர்!

இரவில் உறங்கிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது ரோடு-ரோல்லர் ஏறியதில் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

roadroller

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதியில் உள்ளது கவுரிகன்ச் கிராமம். இந்த கிராமத்தில் வீட்டின் வெளியே நேற்றிரவு உறங்கிக் கொண்டிருந்த அபித் (வயது 14) மற்றும் ஷகில் (வயது 13) ஆகிய இரு சிறுவர்கள் மீது ரோடு-ரோல்லரை ஓட்டிவந்த ஓட்டுநர் ஏற்றினார். இதில் படுகாயமடைந்த அபித் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஷகில் என்ற சிறுவன் மீட்கப்பட்டு, லக்னோவில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரோடு-ரோல்லர் ஓட்டுநர், அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகினார். இதுதொடர்பாக சிறுவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பலமுறை தொடர்புகொண்டும், அரசு அதிகாரிகள் உதவி செய்ய முன்வராததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். காவல்துறையினர் சென்று சமாதானம் செய்த நிலையில், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

amedhi uttarpradesh
இதையும் படியுங்கள்
Subscribe