பிரிவினைகளும், வேற்றுமைகளுமாக பிரிந்து கிடக்கும் நம் சமூகத்தில், சாதி மாறி திருமணம் செய்துகொள்வதே பெரும்பாடாக இருக்கிறது. ஆனால், உடலில் ஏற்பட்ட உணர்வு மாற்றத்தால் மாற்று பாலினத்தைச் சேர்ந்தவர்களாக வாழத்தொடங்கிய திருநங்கையும், திருநம்பியும் திருமணம் செய்துகொண்டு புதிய வரலாறு படைத்துள்ளனர்.

transgender

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

கேரளாவைச் சேர்ந்தவர் இஷான் கே. கிஷான். இவர் பெண்ணாகப் பிறந்து திருநம்பியாக மாறியவர். அதேபோல் சூர்யா என்பவர் ஆணாகப் பிறந்து திருநங்கையாக மாறினர். இவ்விருவரும் மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள். ஒரு கட்டத்தில் தங்களுக்குள் மலர்ந்த காதலை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு திருமணம் செய்துகொள்ளவும் முடிவுசெய்தனர்.

கடந்த ஒருவருடமாக காதலித்து வந்த இவ்விருவருக்கும், திருவனந்தபுரத்தில் வைத்து இன்று காலை திருமணம் நடைபெற்றது. இருவீட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்ற இந்தத் திருமணத்தில், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ. எனும் மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்காக போராடும் அமைப்பினர் என பலரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். இந்தத் திருமணம் சிறப்புத் திருமணங்கள் சட்டத்தின் படி நடைபெற்றதால், அங்கீகரிக்கப்பட்ட திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கேரள மாநிலத்தில் மாற்றுப் பாலித்தைச் சேர்ந்த இருவர் சட்டப்படி திருமணம் செய்துகொள்வது வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.

Advertisment