keralaite businessman joy arakkal case in dubai

கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கடன் தொல்லையால் துபாயில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Advertisment

கேரளாவின் வயநாடு பகுதியைச் சேர்ந்த ஜாய் அரக்கல் துபாயில் எண்ணெய் வணிகம் உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டு வரும் இன்னோவா குழும நிறுவனங்களின் தலைவர் ஆவார். தனது குடும்பத்துடன் ஜூமைராவில் வசித்துவந்த இவர் பர்துபாய் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வந்தார்.

Advertisment

எண்ணெய்சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோ கெமிக்கல் வர்த்தகம், ஐஎஸ்ஓ தொட்டி சுத்தம் சேவைகள், கப்பல் போக்குவரத்து சேவைகள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காகன தொலைத் தொடர்பு நிறுவனம் ஆகியவை அவரது நிறுவனத்தின் முக்கியத் தொழில்களாக இருந்தன. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தனது நண்பரின் வீட்டிற்குச் சென்ற அரக்கல், அந்த குடியிருப்பின் 14 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவம் குறித்த தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், தொழிலில் ஏற்பட்ட கடன் பிரச்சனையால் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவரது உடலைச் சொந்த ஊரான வயநாட்டிற்கு எடுத்துவர அனுமதி பெறப்பட்டு, விரைவில் அவரது உடல் அங்கு அடக்கம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா முதல்வர் பினராயி விஜயன் கையால் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஜாய் அரக்கலின் இந்த இறப்பு தொழில்துறையின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.