தனது தாயின் மறுமணம் குறித்து மகனின் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரளாவைச் சேர்ந்த கோகுல் ஸ்ரீதர் என்ற பொறியியல் கல்லூரி மாணவனின் தாய் தற்போது மறுமணம் செய்துள்ளார். தனது தாயின் மறுமணம் குறித்து அந்த இளைஞனின் பதிவு பலரது மனதையும் உருக வைத்துள்ளது என்றே கூறலாம்.

kerala youth facebook post about his mother's second marriage goes viral

Advertisment

Advertisment

தன்னுடைய தாயின் மறுமணம் குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், "சந்தேகம், அவநம்பிக்கை, வெறுப்புணர்வுடன் யாரும் இந்த பதிவைப் படிக்க வேண்டாம் என்றும், அப்படியே நீங்கள் வெறுப்புடன் பார்த்தாலும் அது எங்களை எந்த வகையிலும் இழிவுபடுத்தாது.

எனக்காகத் தனது வாழ்க்கை முழுவதுமாக அர்ப்பணித்தவர் எனது தாய், அவரது வாழ்வில் பல துன்பங்களை அனுபவித்தவர். ஒரு முறை என் தந்தை என் தாயைப் பலமாகத் தாக்கிவிட்டார், என் தாயின் தலையிலிருந்து நிறைய ரத்தம் வழிந்தது. அப்பொழுது என் தாயிடம் நான் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் இன்னும் என் நினைவில் உள்ளது.

ஏன் இன்னும் இந்த உறவைத் தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நான் கேட்டேன். அதற்கு பதிலளித்த என் தாய், நான் உனக்காக மட்டுமே வாழ்கிறேன், அதற்காக இந்த கஷ்டங்களை எல்லாம் நான் பொறுத்துக்கொள்வேன் என்றார். அப்போது எனது தாயின் கரங்களைப் பிடித்துக்கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியே தனியாக வந்தவன் தான் நான்.

kerala youth facebook post about his mother's second marriage goes viral

எனக்காக தன்னுடைய இளமையையும், கனவுகளையும் அவர் விலக்கி வைத்தார். இதற்கு மேல் எனக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவரது திருமணத்தை ரகசியமாக வைத்திருக்க விரும்பவில்லை. அவர் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று தான் பல காலமாக காத்திருந்தேன்.என் தாய்க்குத் திருமண வாழ்த்து, அவர் மேன்மேலும் பல உயரங்களுக்கு செல்ல என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என பதிவிட்டிருந்தார்.

அவரது இந்த பதிவு பலரையும் அடடே போடவைத்தது. அதோடு நில்லாமல் அதனை பலரும் பாராட்டி ஷேர் செய்து வருகின்றனர். தற்பொழுது வரை இந்த பதிவை சுமார் 40,000 நபர்கள் லைக் செய்தும் 4000 நபர்கள் ஷேர் செய்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.