Advertisment

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு; 7 பேர் உயிரிழப்பு!

Kerala Wayanad Landslide incident due to heavy rainfall

தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் இன்று (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தேசிய பேரிடர் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

Advertisment

அதே சமயம் அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இரு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்த நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் இந்த நிலச்சரிவு தொடர்பாகச் சுகாதாரத் துறை மற்றும் தேசிய சுகாதார இயக்கம் ஒரு கட்டுப்பாட்டு அறையைத் திறந்துள்ளது. அதில் அவசர உதவிக்காக 9656938689 மற்றும் 8086010833 என்ற உதவி எண்களை அறிவித்துள்ளது. அதோடு மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க இரண்டு விமானப்படை ஹெலிகாப்டர்கள் கோவை மாவட்ட சூலூரில் இருந்து காலை 07.30 மணிக்கு புறப்பட்டுள்ளன.

landslide wayanad Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe