அண்மையில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது விஜய் ரசிகர்கள் மத்தியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. நெய்வேலி சுரங்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தமாஸ்டர் படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர் விஜய் வருமானவரித்துறை அதிகாரிகளால் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அவரது வீட்டில் பலமணிநேரம் விசாரணைக்குப் பிறகு வருமான வரித்துறையினர் சென்றனர். இந்த சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்நிலையில் கேரளாவை சேர்ந்தகிருஷ்ணதாஸ் என்ற விஜய் ரசிகர் ஒருவர் சபரிமலையில் அவருக்காக அங்கப்பிரதட்சனம் செய்து இதுபோன்ற இன்னல்களில் இருந்து நடிகர் விஜய்மீள வேண்டும், இது போன்ற பிரச்னைகள் மீண்டும்அவருக்கு வரக்கூடாது எனவேண்டியுள்ளார்.
இதுபற்றி கிருஷ்ணதாஸ் கூறுகையில், நான் கேரள மாநிலத்தைச் சேர்ந்த குருவாயூர் கோவிலில் பணியாற்றி வருகிறேன்.துள்ளாத மனமும் துள்ளும் படத்திலிருந்து நான் விஜயின் ரசிகராக இருக்கிறேன். நான் மட்டுமல்லாது என் குடும்பத்தில் உள்ள அனைவருமே விஜய் ரசிகராக உள்ளனர். மதுரையிலுள்ள விஜய் மக்கள் இயக்கம் உறுப்பினர்களுடன் நான் தொடர்பில் இருக்கிறேன்.
அதேபோல் என் மகனும் கேரளாவில் விஜய் ரசிகர் மன்றம் ஒன்றையும் வைத்துள்ளார். அன்மையில் நடிகர் விஜயின் வீட்டில் வருமானவரித்துறைசோதனை நடைபெற்றது ஆனால் அவருக்கு என்ன கஷ்டங்கள் என்றெல்லாம் எனக்கு தெளிவாக தெரியவில்லை இருந்தாலும்அவருக்கு இது போன்ற இன்னல்கள் வரக்கூடாது என்பதற்காக பல்வேறு கோயில்களில் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளேன். தற்பொழுது ஐயப்பன் கோவிலிலும் நடிகர் விஜய்க்காக அங்கப்பிரதட்சனம் செய்தேன் என்றார்.