Advertisment

சிறுவனை கியர் மாற்ற அனுமதித்த ஓட்டுநர்... லைசென்ஸை பறிமுதல் செய்த அதிகாரிகள்!

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெண்களை கியர் மாற்றுவதற்கு பேருந்து ஓட்டுநர் அனுமதித்த சம்பவம் வீடியோவாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் அப்படியான சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் டிரைவர் ஒருவர் தனது அருகில் அமர்ந்திருந்த சிறுவனை கியர் மாற்றச் சொல்லி பேருந்தை இயக்கிச் சென்றுள்ள சம்பவம் வீடியோவாக பரவி வருகிறது.

Advertisment

அப்பகுதியில் சுற்றுலாப் பேருந்தினை இயக்கிவந்த சுதேஷ், பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவல்லா மலப்பாலி ரோட்டில் சென்றுகொண்டிருந்தபோதுதான், தனது அருகே அமர்ந்திருந்த சிறுவனிடம் கியரை மாற்றச் சொல்லி வெகு நேரமாக பேருந்தினை ஓட்டிச் சென்றுள்ளார். இதனை அடுத்து டிரைவர் சுதேஷின் லைசன்ஸ், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜிஜி ஜார்ஜ் உத்தரவிட்டதன் பேரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தான் சாலையில் பேருந்தை இயக்கவில்லை என்றும் மைதானத்தில்தான் இயக்கியதாகவும் சுதேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment
Driving
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe