Skip to main content

மாணவர்கள் போராட்டம்... தடியடி நடத்திய போலீசார்

Published on 20/11/2019 | Edited on 20/11/2019


கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பல்கலைகழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் நடைபெற்ற தேர்வுகளில் சராசரி மதிப்பெண்ணைக் கூடத் தாண்டாத மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.லஇதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசிய மாணவர்கள் அமைப்பு என்னும் மாணவர்கள்குழு கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த தடியடியின்போது போலீசாருக்கும் மாணவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் போலீஸார் மாணவர்கள் மீது லத்தியடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 


இந்த தாக்குதலில் மாணவர் அமைப்பு தலைவர் அபிஜித் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ சாஃபி பரம்பில் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில்,காங்கிரஸ் கட்சி சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் மாணவர்கள் போராட்டத்தை குறித்து வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், காவல்துறை இப்படி கொடூரமாக நடந்து கொள்வதை பார்க்கவே கொடுமையாக இருக்கிறது என்று தெரிவித்து உள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயர்நீதிமன்றம் தலையிடவில்லை என்றால் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் திருத்தப்பட்டிருக்கும் - பொன்ராஜ் பகீர் பேட்டி!

Published on 10/07/2020 | Edited on 10/07/2020

 

kl;

 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர்.

 

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். இந்நிலையில் இதுதொடர்பான கேள்விகளுக்கு பொன்ராஜ் பதிலளிக்கின்றார். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு, 

 

சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. உயர்நீதிமன்றமே நேரடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யப்பட்டு வருகிறார். தற்போது சி.பி.ஐ. இந்த வழக்கைக் கையில் எடுத்துள்ளது. இந்தச் சூழ்நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

இந்தியக் குற்றவியல் சட்டம் எந்த அளவுக்கு ஓட்டை உடைசலாக இருக்கிறது என்பதை இந்த வழக்கு எப்படி வெளிக்கொண்டு வந்துள்ளது என்றுதான் நான் பார்க்கிறேன். மதுரை உயர்நீதிமன்றம் மட்டும் இந்த வழக்கில் தலையிடாமல் இருந்திருந்தால் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கூட திருத்தி எழுதப்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஒரு முதலமைச்சர் மூச்சுத் திணறலால்தான் அவர்கள் இறந்தார்கள் என்று சொல்கிறார், அதை அமைச்சர்களும் அச்சு மாறாமல் சொல்கிறார்கள். இன்னும் முழுமையாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வரவில்லை என்றாலும் ஒரு நீதிபதியின் மேற்பார்வையில் அந்தச் சம்பவம் நடந்து முடிந்துள்ளது. கொல்லப்பட்ட இருவரும் வியாபாரிகள் என்பதால் வணிக சங்கங்கள் அதைப் பெரிய விஷயமாகக் கொண்டு வரச் செய்தார்கள். ஊடகங்கள் இந்தச் செய்திக்கு அதிக முக்கியத்துவம் தந்தார். 

 

எந்தக் குற்றமும் செய்யாத இருவரை அடித்தே கொலை செய்கிறார்கள் என்றால் அதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியுமா? மனிதத் தன்மை இருக்கின்ற யாரும் இதைச் செய்ய மாட்டார்கள். சக மனிதன் என்ற எண்ணமே இல்லாதவர்கள்தான் இந்த மாதிரியான சம்பவத்தைச் செய்ய முடியும். இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதில் பொதுமக்கள் உள்ளிட்ட யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஜார்ஜ் பிளாய்ட் சம்பவத்தில் எப்படி உலகமே கண்டனம் தெரிவித்ததோ அதைப் போன்று இந்த வழக்கில் ஒட்டுமொத்த சமூகமே தலையிட்டதால்தான் நீதிமன்றம் நேரடியாக இந்த விஷயத்தைக் கையில் எடுத்தது. அதற்குக் காரணம் ஊடகத்தின் வெளிச்சம். அந்த ஃபோக்கஸ் காரணமாகவே இந்தச் சம்பவம் தமிழகத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

 

http://onelink.to/nknapp

 

இந்தக் குற்றவியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு என்னென்ன ஜனநாயக உரிமைகள் இருக்கிறது என்பதைச் சரியான முறையில் வரையறுத்து வைத்துள்ளார்கள். ஒருவரை கைது செய்தால் அவரை 24 மணி நேரத்திற்குள் மாஜிஸ்திரேட்டிடம் நேரில் ஆஜர்படுத்த வேண்டும். பிறகு அவரின் மேற்பார்வையில் அவர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்படுவார். தேவை ஏற்படுமாயின் நீதிமன்றக் காவலில் இருந்து போலிசார் அவர்களை விசாரணை செய்வார்கள். இதுதான் காலங்காலமாக வழக்கமாக உள்ள நடைமுறை. இதைத்தான் அனைத்து மாநில காவல்துறை அதிகாரிகளும் பின்பற்றுகிறார். அதற்கு முன்பு கைது செய்யப்பட்டவர்களை மருத்துவர்கள் சோதனை செய்து சான்றிதழ் கொடுக்க வேண்டும். அதனை நீதிபதி சரிபார்த்து, அனைத்தும் சரியாக இருந்தால் குற்றம் சாட்டப்பட்டவர்களைச் சிறைக்கு அனுப்புவர்கள். ஆனால் இந்த வழக்கில் அத்தகைய எந்த நடமுறையையும் பின்பற்றப் படவில்லை என்பதே நம்முடைய குற்றச்சாட்டாக உள்ளது.  அதை சி.பி.ஐ. முறையாக விசாரிக்க வேண்டும். 


 

Next Story

"சிசிடிவி காட்சிகளை காட்டுங்கள் அப்போது தெரியும் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்று.." - பியுஷ் மனுஷ் காட்டம்!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020
g

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக்கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை, மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். 

இந்நிலையில் இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார் சமூக செயற்பாட்டாளர் பியுஷ் மனுஷ். இதுதொடர்பாக அவர் பேசும்போது, "சாத்தான்குளம் விவகாரத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்துள்ளார்கள். அதில் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. என்னுடைய கேள்வி ரொம்ப சிம்பிள். நடவடிக்கை என்றால் அவர்கள் கொடுத்த புகாரில் ஒரு எப்ஐஆர் போட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஏன் அவ்வாறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்திருந்தால் பலபேரின் தவறுகள் தெரிய வந்திருக்கும். அவர்கள் இருவரும் இறந்து நான்கு நாட்கள் ஆகின்றது. ஆனால் மக்கள் ஒரு எப்ஐஆர் வாங்க தவித்து கொண்டு இருக்கிறார்கள். வழக்கு பதிவு செய்வதற்காக பெரிய போராட்டம் செய்ய வேண்டியுள்ளது. நினைத்து பார்த்தாலே மனதுக்கு கஷ்டமாக இருக்கின்றது. ஐவிட்னஸ் சாட்சி இருக்கின்றது.

பின்பக்கமாக அழுத்தி குத்தியிருக்கிறார்கள், 7 வேட்டி நனைந்திருக்கின்றது. அந்த அளவுக்கு ரத்தம் வந்துள்ளது, கடுமையாக தாக்கி உள்ளார்கள். எத்தனை துணி மாத்தினாலும் வருகின்ற ரத்தம் நிற்கவில்லை. ரத்தம் ஓட, ஓட அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார்கள். அங்கு அவர்கள் இருவரும் சரியான உடல் நிலையுடன் இருப்பதாக சர்டிபிகேட் வாங்கி இருக்கிறார்கள். இந்த தாக்குதலை நடத்திய எஸ்ஐ போட்டோக்களை மட்டுமே போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அந்த இன்ஸ்பெக்டர் போட்டோவையும் ஊடகங்கள் போட வேண்டும். அவர்தான் முக்கிய குற்றவாளி. அப்புறம் அந்த எஸ்பி அருண், அவர்கள் இருவரும் இறந்த அன்றே அவர்கள் நெஞ்சுவலியால்தான் செத்து போய்விட்டார்கள் என்று எப்படி இந்த எஸ்பி சொல்கிறார், அவருக்கு எப்படி தெரியும். 

அதை நம்முடைய முதலமைச்சரும் தற்போது சொல்கிறார். என்ன ஒரு கொடுமையா இருக்கு. உயிருக்கு என்ன உத்திரவாதம் இருக்கின்றது. இருபது வழக்குகளை நானும் வாங்கி வைத்துள்ளேன். தப்பு செய்த அவர்கள் மீது கண்டிப்பாக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். தவறு செய்த யாரும் தப்பிக்கக்கூடாது. காவல் நிலையத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஒப்படையுங்கள். நாங்கள் தான் எதுவுமே செய்யவில்லை என்று சொல்கிறீர்களே, அப்புறம் எதற்கு வழக்கமான நடைமுறைகளை செய்ய காவல்துறையினர் மறுக்கின்றார்கள். நாங்கள் அவர்களை அழைத்து வந்தப்படியே அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினோம் என்று ஏன் காவல்துறை நிரூபிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அவர்கள் தாக்கியது அனைவருக்கும் தெரியும். அவர்கள் யாரையும் விட்டுவிடக்கூடாது. சட்டத்தின் முன் தகுந்த தண்டனை பெற்றுத்தர வேண்டும்" என்றார்.