Advertisment

கேரளாவுக்கும் இனி தனி பாடல்

pinaroyi vijayan

கேரள அரசாங்கம் தங்களுக்கான மாநிலப் பாடலை இயக்குவதற்காக இன்று ஒரு குழுவை நிறுவி, அதில் திறமையான எழுத்தாளர்களையும், மொழி வல்லுனர்களையும் சேர்த்துள்ளது.

Advertisment

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில்அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் தென்னிந்திய மாநிலங்களின் சமூக கலாச்சார மரபை வெளிக்காட்டும் நோக்கில் கேரள கணம் என்கிற தலைப்பில் குழு அமைக்கப்படும் என்றனர்.

Advertisment

அப்போது, கலாச்சாரத்துறை செயலாளர் ராணி ஜார்ஜ் இந்த குழுவின் நடத்தாளர் என்றும், விமர்சகர் எம். லீலாவதி, கவிஞர் எழச்செரி ராமச்சந்திரன், எம்.எம். பஷீர், எம்.ஆர். ராகவ வாரியர் மற்றும் கே.பி. மோஹனன் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்கள் என்று அதிகாரபூர்வமாக வெளியிட்டனர்.

"இன்னும் சில மாதங்களில் அரசு விழாக்களிலும், பொது விழாக்களிலும் கேரளாவுக்கான பாடலை பாடப்போகிறோம்" என்று முதல்வர் பினாரயி விஜயன் கூறியுள்ளார்.

இத்தலைப்பில் பொதுமக்கள், பாடலாசிரியர் மற்றும் கவிஞர்களிடம் இருந்து வரும் பரிந்துரைகள் மற்றும் பாடல்களைதேர்வு செய்ய கேரளா சாஹித்ய அகாதமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து வரும் பட்டியலை மேலும் நிபுணர் குழு பரிசீலனை செய்து கேரள மாநிலத்திற்கான பாடலை தேர்வு செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

Kerala Pinarayi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe