Skip to main content

பொது இடங்களில் எச்சில் துப்பவும் தடை... காசா்கோடு மாவட்டத்தை முடக்கியது அரசு... 

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

 

கேரளாவில் காசா்கோடு மாவட்டத்தை அரசு முடக்கியது. சாலைகளில் கூடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் தயாராகி வருகின்றனர்.
 

நாடு முமுவதும்  கரோனா வைரஸின் தாக்கம் அதிகம் இருக்கும் 75 மாவட்டங்களை தனிமைப்படுத்தி முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை தமிழக அரசு முடக்கம் செய்து மற்ற மாவட்டங்களோடு உள்ளான தொடா்பை நிறுத்தியது.


 

 kasaragod -



இதில் கேரளாவில் 7 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு கூறியபோது அந்த மாநில முதல்வா் பினராய் விஜயன் அத்தியாவசி பொருட்கள் இல்லாமல் அந்த மாவட்ட மக்கள் கஷ்டபடுவார்கள் என கூறி நேற்று அதை அவா் நடைமுறைபடுத்த வில்லை. 
 

இந்த நிலையில் இன்று 11 மணிக்கு பினராய் விஜயன் தலைமையில் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் 7 மாவட்டங்களை முடக்குவது சம்மந்தமாக ஆலோசிக்கப்பட்டது. இதில் முதலில் கரோனா அதிகம் பாதிப்புள்ள காசா்கோடு மாவட்டத்தை முடக்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடா்ந்து காசா்கோடு மாவட்ட ஆட்சியா் நசீா் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். இதனால் மற்ற மாவட்டங்களில் இருந்து காசா்கோடு தனிமை படுத்தபட்டன. இதனால் வா்த்தக நிறுவனங்கள் மற்றும் சந்தைகளில் பொருட்கள் வாங்க மக்கள் முண்டியடித்தனா். மேலும் அந்த மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுபாடியின்றி கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வது குறித்து மாவட்ட ஆட்சியருடன் வா்த்தக நிறுவனங்கள் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
 

இதே போல் மற்ற மாவட்டங்களில் கடைகளிலும் பொது இடங்களிலும் கூட்டம் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. தனியார் பார்கள் இன்று முதல் மூடப்படுகிறது. மேலும் பொது இடங்களில் எச்சில் துப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் பயணிகளின் தேவை இருந்தால் மட்டும் தான் இயக்கப்படும். அதுவும் குறிப்பிட்ட அளவு பயணிகள் இருந்தால் தான் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்