Advertisment

கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ் - மாநில அரசின் புதிய முயற்சி!

kerala health minister veena george

கேரளமாநிலம் கோழிக்கோட்டில் 12 வயது சிறுவன்நிபா வைரஸுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பலியானான். கேரளா ஏற்கனவே கரோனாதொற்று பரவலில்சிக்கித் தவிக்கும் நிலையில், நிபா வைரஸால்சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பலியான சிறுவனின் வீட்டைச் சுற்றி 3 கிலோமீட்டருக்கு உட்பட்டபகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேலும், அந்த சிறுவனுடன்தொடர்பில் இருந்த 129 சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 251 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பலியான சிறுவனின் வீடு இருந்த பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில்11 பேருக்குநிபா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் மாதிரிகளைப் பரிசோதிக்க கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில், புனே வைராலஜி நிறுவனத்தின் நிபுணர்களால் சிறப்புஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதற்கிடையே, புனே வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட 8 பேரின் மாதிரிகளை சோதனை செய்ததில், அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மேலும், நிபா வைரஸ் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளசிறுவனின்வீட்டைச் சுற்றியுள்ள பகுதியில், இன்றுமுதல் (07.09.2021) வீடு வீடாகச் சென்று கண்காணிக்கும் பணி நடைபெறும் எனவும் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

nipah virus Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe