கடந்த 50வருடங்களில் வரலாறு காணாத மழையை சந்தித்தது கேரளா. இதனால், 14 மாவட்டங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு பலத்த சேதம் அடைந்திருக்கிறது. அத்துடன் மாநிலத்தில் உள்ள 39 நீர்த்தேக்கங்களில் 35 அணைகளும் திறக்கப்பட்டு உள்ளதால் வரலாறு காணாத பேரழிவை மாநிலம் சந்தித்து வருகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக கேரளாவில் இருக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு வருகின்ற 28ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வுகள் நடக்கும் மறுதேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.