/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sabarimalai 1_0.jpg)
கடந்த 28ஆம் தேதி உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குள் செல்ல அனுமதி அளித்ததை அடுத்து, கேரளாவில் பல்வேறு இந்து அமைப்பினர் போரட்டங்களை நடத்திவருகின்றனர். இந்து அமைப்புகள் நடத்தும் போராட்டங்களுக்கு மற்ற மத அமைப்புகளும் பக்கபலமாக இருக்கின்றன. இந்த போராட்டங்களில் பெண்களும் கலந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து இன்று கேரளாவில் இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் தலைமை செயலகத்தை நோக்கி பேரணி நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சபரிமலை விவகாரம் குறித்து பேச்சு நடத்த நாளை தந்திரி குடும்பத்தினர் மற்றும் பந்தளம் அரண்மனை குடும்பத்தினர், பிரதிநிதிகள் ஆகியோரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு அழைத்துள்ளது.
Follow Us