Advertisment

'சபரிமலையில் ஜூன் 14- ஆம் தேதி பக்தர்களுக்கு அனுமதியில்லை'-  அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பேட்டி!

kerala sabarimala temples peoples not allowed minister press meet

Advertisment

கேரள மாநிலம் சபரிமலையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு, கோயில் தந்திரி மகேஷ் மோகனருடன் தேவஸ்வம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப்பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், "மாதாந்திர பூஜைக்காக வரும் ஜூன் 14- ஆம் தேதி சபரிமலை திறக்கப்படும் போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஜூன் 14- ஆம் தேதி நடைதிறக்கப்பட்டு ஜூன் 19- ஆம் தேதி வரை மிதுனம் மாத பூஜைக்கான பூஜைகள் நடைபெறும். கரோனா பரவலாம் என்பதால் சபரிமலையில் ஜூன் 19- ஆம் தேதி முதல் ஜூன் 28- ஆம் தேதி வரை நடக்கவிருந்த ஆராட்டு விழாவும் ரத்து செய்யப்படுகிறது." என்றார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சபரிமலையில் பக்தர்களை அனுமதிப்பதற்குத் தந்திரி எதிர்ப்புதெரிவித்திருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.

coronavirus Kerala lockdown peoples sabarimala
இதையும் படியுங்கள்
Subscribe