kerala sabarimala temple reopen on oct 16th

Advertisment

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அக்டோபர் 16- ஆம் தேதி திறக்கப்படுகிறது.

இது தொடர்பாக சபரிமலை கோயில் தேவசம்போர்டு வெளியிட்டுள்ள அறிவிப்பில். 'சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக வரும் அக்டோபர் 16- ஆம் தேதி திறக்கப்படுகிறது. அக்டோபர் 17- ஆம் தேதி முதல் அக்டோபர் 22- ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும். கடும் கட்டுப்பாடுகளுடன் நாள்தோறும் 250 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். சாமி தரிசனத்திற்கான டிக்கெட்டை பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம். முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும்' என பக்தர்களை அறிவுறுத்தியுள்ளது.