covid 19

உலகைஅச்சுறுத்திவரும் கரோனாவைரஸ், தற்போது மரபணுமாற்றமடைந்து, புதிய வகை கரோனவாக மாறியுள்ளது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில், இந்தப்புதிய வகை கரோனாவேகமாகப் பரவி வருகிறது. இந்த புதிய வகை கரோனாபரவலைத் தடுக்கும் விதமாக,இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து விமானங்கள் வர பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.

Advertisment

இந்தநிலையில், இங்கிலாந்திலிருந்து கடந்த ஒரு வாரத்தில் கேரளா திரும்பியவர்களில் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது எனக் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே சைலாஜா கூறியுள்ளார்.

Advertisment

கரோனாதொற்று உறுதியாகியுள்ள 8 பேரின்மாதிரிகளும்,புதிய வகை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என அறிவதற்காக புனேஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.