கேரள மாநிலத்தில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29பேர் பலியாகியுள்ளனர். அதில் பலர் நிலச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளனர்.

மழை தொடர்ந்துவருவதால், கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும்திறந்துவைக்கப்பட்டுள்ளன. அதன் விளைவாக அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், மேலும் பல பகுதிகளை சூழந்துகொண்டுள்ளன.

KERALA

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

இந்நிலையில் கேரள பத்திரிகையான மனோரமாவின் தலைமை போட்டோகிராஃபர் ரிஜோ ஜோசப்கேரள வெள்ளத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று அனைவரின் கவனத்தையும் பெற்றுவருகிறது. கேரளாவிலுள்ள செறுதோணி பாலத்தில் இருபக்கமும் வெள்ளநீர் சூழ்திருக்கமீட்பு குழுவினர் வெள்ளத்தில் சிக்கிய ஒருகுழந்தை தோளில் போட்டுக்கொண்டு ஓடும் புகைப்படம் வெளியானது அந்த மீட்பு வீரர்களுக்குபல பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தற்போது அங்கு குவிந்துள்ள மீட்புப்பணி வீர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தமால் வெள்ளமீட்பு பணிகளில் இறங்கி செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.