கைக்கொடுக்காத இரவு நேர ஊரடங்கு... தொடர்ந்து அதிகப்படியான கரோனா பாதிப்பில் கேரளா!

bm

கேரளாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது. இந்தநிலையில் கேரளாவில் இன்றும் தினசரி கரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 29,322 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 131 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 38.83 லட்சம் பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 2.46 லட்சம் பேர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். கேரளாவில் கடந்த திங்கள் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும் பெரிய அளவிலான வித்தியாசம் தெரியவில்லை. ஊரடங்குக்கு முன்பு இருந்ததை போல 30 ஆயிரம் என்ற அளவிலேயே தொற்று இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

corona virus
இதையும் படியுங்கள்
Subscribe