Advertisment

KERALA CORONA

கேரளாவில் தொடர்ந்து 30 ஆயிரத்தைக்கடந்து வந்த தினசரி கரோனாபாதிப்பு, கடந்த சில நாட்களாகச் சற்று குறைந்து வந்தது. கடந்த திங்கட்கிழமையன்று19,688 பேருக்கும், நேற்றைய தினம்25,772 பேருக்கும் கரோனாஉறுதியானது.

Advertisment

இதனைத்தொடர்ந்து கேரளாவில் கரோனாஉறுதியாகும் சதவீதம் (TPR)குறைந்து வருவதால், அமலில் இருந்தஇரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கும் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் நேற்று அறிவித்தார்.

இந்தநிலையில் கேரளாவில் மீண்டும் தினசரி கரோனாபாதிப்பு 30 ஆயிரத்தைத்தாண்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில்அம்மாநிலத்தில் 30,196 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால்பாதிக்கப்பட்ட 181 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் நேற்று15.87 ஆக இருந்த கரோனாஉறுதியாகவும் சதவீதம், தற்போது17.63% ஆக அதிகரித்துள்ளது.