kerala

இந்தியாவில் கேரள மாநிலத்தில்தான் தினசரி கரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்துவருகிறது. இருப்பினும் செப்டம்பர் முதல் வாரத்தில் அம்மாநிலத்தில் 30 ஆயிரமாக இருந்துவந்த தினசரி கரோனா பாதிப்பு, படிப்படியாக குறைந்து 16 ஆயிரத்திற்கும்கீழ் வந்தது.

Advertisment

ஆனால், கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்த தினசரி கரோனாபாதிப்பு 20 ஆயிரத்தைக் கடந்தது. நேற்று (17.09.2021) அம்மாநிலத்தில்23,260பேருக்கு கரோனாபாதிப்பு உறுதியானது. இந்தநிலையில், இன்று கேரளாவில் தினசரி கரோனாபாதிப்பு குறைந்துள்ளது.

Advertisment

இன்றைய தினம் கேரளாவில் 19,325 பேருக்கு மட்டுமே கரோனாபாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், கரோனாவால்பாதிக்கப்பட்ட 143 பேர் உயிரிழந்துள்ளனர்.