Advertisment

கேரளாவில் கட்டுக்குள் வரும் கரோனா - 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்பு!

corona

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு மிகப்பெரும் அளவில் குறைந்துள்ள நிலையில், கேரளாவில் மட்டும் தினசரி கரோனா பாதிப்பு மற்ற மாநிலங்களைவிட மிக அதிக அளவில் பதிவாகி வந்தது. இதனையடுத்து கேரள அரசு கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

Advertisment

பஞ்சாயத்து மற்றும் நகர வார்டுகள் அளவில் ஊரடங்கை அமல்படுத்தியது. இதுபோன்ற நடவடிக்கைகளால் அண்மைக்காலமாகக் கேரளாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது. இந்தநிலையில் இன்று கேரளாவில் தினசரி கரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

Advertisment

இன்று கேரளாவில் 8,850 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளது. கரோனா உறுதியாகும் சதவீதம் 11.82 ஆக குறைந்துள்ளது. அதேநேரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 149 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் நேற்று 12,297 பேருக்கு கரோனா உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

state health department Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe