இந்தியாவில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி பெய்து வருகிறது. இதனால் கேரளா மற்றும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையும், திருச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது என்று கேரள மாநில பேரிடர் மேலாண் அமைப்பு தெரிவித்து உள்ளது.