kerala

Advertisment

இந்தியாவில் கரோனாபாதிப்பு குறைந்துவந்த நிலையில், கேரளாவில் மட்டும் தினசரி கரோனாபாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் தினசரி கரோனாபாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்து வருகிறது. நேற்று அம்மாநிலத்தில்30,203 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதியானது.

இந்தநிலையில்இன்றும் கேரளாவில் தினசரி கரோனாபாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில்கேரளாவில் 32,803 கரோனாஉறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 173 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏற்கனவே கேரளாவில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினால்மட்டுமே கேரளாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.