இந்தியாவில் கரோனாஇரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், கேரளாவில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கேரளத்தில் நேற்று மட்டும்ஒரேநாளில் 31,445 பேருக்கு கரோனாஉறுதியானது. இது நாடு முழுவதும்நேற்று பதிவான கரோனா எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70 சதவீதமாகும்.
இந்தநிலையில்இன்று மீண்டும் கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் 30,007 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால்பாதிக்கப்பட்ட 162 பேர் உயிரிழந்துள்ளனர். ஓணம் பண்டிகைக்கு அளிக்கப்பட்ட தளர்வுகளால், கரோனாபரவல் அதிகரித்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.