இந்தியாவில் கரோனாபாதிப்பு குறைந்துவந்த நிலையில், கேரளாவில் மட்டும் தினசரி கரோனாபாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. குறிப்பாக தொடர்ந்துநான்கு நாட்களாக தினசரி கரோனாபாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம்29, 836 பேருக்கு கரோனா உறுதியானது.
அதன்பின் நேற்று19,622 பேருக்கு மட்டுமே கரோனாஉறுதியானது. இதனால் கரோனாபாதிப்பு கேரளாவில் குறைவதாககருதப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அம்மாநிலத்தில் தினசரி கரோனாபாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம்30,203 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 115 பேர் உயிர் இழந்துள்ளனர். கேரளாவில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.