இந்தியாவில் கேரள மாநிலத்தில்தான் தினசரி கரோனாபாதிப்புகள் அதிகமாக இருந்துவருகிறது. இருப்பினும் செப்டம்பர் முதல் வாரத்தில் அம்மாநிலத்தில் 30 ஆயிரமாக இருந்து வந்த தினசரி கரோனாபாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது.
இந்தநிலையில், அம்மாநிலத்தில் சில நாட்களுக்கு முன் சுமார் 15 ஆயிரமாக இருந்த தினசரி கரோனா பாதிப்பு, நேற்று17,681-ஆக அதிகரித்தது. அதன்தொடர்ச்சியாகஇன்று அம்மாநிலத்தில் 22,182 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்ட 178 பேர் உயிரிழந்துள்ளனர்.