இந்தியாவில் கரோனாபாதிப்பு குறைந்துவந்த நிலையில், கேரளாவில் மட்டும் கரோனாபாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த சில நாட்களாகவே அம்மாநிலத்தில் தினசரி கரோனாபாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்து வருகிறது.
இந்த நிலையில்இன்று தினசரி கரோனாபாதிப்பு சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில்கேரளாவில்29,322 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று கேரளாவில் 32,803 பேருக்கு கரோனாஉறுதியானது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நேற்று18.41ஆக இருந்த கரோனாஉறுதியாகும் சதவீதம், இன்று17.91% ஆக குறைந்துள்ளது.