Advertisment

திங்கள் முதல் இரவு நேர ஊரடங்கு அமல் - கேரளா அரசு அறிவிப்பு!

kerala

Advertisment

கேரளாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக தினசரி கரோனாபாதிப்பு 30 ஆயிரத்திற்கும் மேல் பதிவானது.

இந்தநிலையில் கேரளாவில் இன்றும் தினசரி கரோனாபாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில்31,265 பேருக்கு கரோனாஉறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 153 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்துகேரளாவில் திங்கட்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணிமுதல்காலை 6 மணிவரைஇந்த ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும்கேரளா அரசு அறிவித்துள்ளது.

corona virus Kerala night curfew
இதையும் படியுங்கள்
Subscribe