kerala puthupalli by-election Sandy Ooman lead

கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி (வயது 80) உடல் நலக்குறைவு காரணமாகப்பெங்களூருவில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி அதிகாலை 4.25 மணியளவில் காலமானார். கேரள மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான உம்மன் சாண்டி கடந்த 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலும், 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை என இருமுறை கேரள மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தவர்.

Advertisment

கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் 1970 முதல் 2021 வரை காங்கிரஸ் கட்சி சார்பாக 12 முறை வெற்றி பெற்றுத்தொடர்ந்து 52 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இத்தனை ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்தியாவின் ஒரே அரசியல் தலைவர் கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஆவார்.

Advertisment

உம்மன் சாண்டியின் மறைவைத்தொடர்ந்து அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்த புதுப்பள்ளி சட்டமன்றத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த தொகுதிக்கு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் போட்டியிட்டார். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி பதிவான வாக்குகள் தற்போது இன்று எண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுப்பள்ளி சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சாண்டி உம்மன் முன்னிலை வகித்து வருகிறார். அதே சமயம் பாஜக வேட்பாளர் லிஜின் லால், மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜெய்க் தாமஸ் ஆகியோர் பின் தங்கியுள்ளனர்.