கேரளாவில் பேருந்து ஒன்றின்முன் பக்கத்தில் உள்ள சக்கரப் பகுதியில் சிக்கிய இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தின் ஒரு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டியை, அவருக்கு பின்னால் வந்த தனியார் பேருந்து நெருக்கமாக வந்து மோதியது. இதில் பேருந்தின் முன் சக்கரம் இருக்கும் பகுதியில் அவர் சிக்கியுள்ளார்.
அவர் அப்படியே பேருந்தில் இழுத்து வரப்பட்டதை கண்ட பொதுமக்கள் பேருந்தை உடனடியாக நிறுத்தி, பேருந்து சக்கரத்தில் சிக்கியவரை மீட்டனர். இதனால் அவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் விபத்து நடந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் பதிவாகியுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.