நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்ட விசாரணை கைதியுடன் கேரளா மாநில காவல்துறையினர் எடுத்த ‘டிக்டாக்’ வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
தொடர்ந்து டிக் டாக் ஆப் பலவிதமான சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ஒருபுறம் அதற்கான எதிர்ப்பு அதிகரித்தாலும், அதன் மீதான மோகமும் அதிகரித்தே வருகிறது. அந்த வகையில் கேரளாவின் திருவனந்தபுரம் பகுதியில் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட வேண்டிய கைதியுடன் வழியில் நின்று டிக் டாக் வீடியோ எடுத்து வெளியிட்டதால் 3 காவலர்கள் சிக்கலில் மாறியுள்ளனர்.
இந்த வீடியோவில் காவல்துறை வாகனத்தின் முன்பு நின்று கொண்டு, கைதியுடன் காவல்துறையினர் மலையாள பாடலுக்கு நடனமாடி, அதனை வீடியோவாக எடுத்துள்ளனர். அதேபோல நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் வாகனத்தின் உள்ளேயும் அமர்ந்து தொடர்ந்து ‘டிக்டாக்’ வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானதை அடுத்து, அந்த காவலர்களின் செயலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/79OXbxxmo30.jpg?itok=FpTube7p","video_url":" Video (Responsive, autoplaying)."]}