Published on 06/10/2018 | Edited on 06/10/2018

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சபரிமலை தேவசம் போர்டு மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று அறிவித்தது. இதனை அடுத்து பெண் பக்தர்கள் வருகைக்காக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்யத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஆண் காவலர்கள் தவிர, 500 பெண் காவலர்களை பெண்களின் பாதுகாப்பிற்காக பணி நியமிக்கப்படுவார்கள் என்று கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.
வருகின்ற 18ஆம் தேதி சபரிமலை கொவில் திறந்து பூஜை பணிகள் தொடங்க உள்ளதால், இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.