Skip to main content

குடியுரிமை விவகாரம்.... பாஜகவுக்கு எதிராக வீட்டின் முன்பு போர்டு வைத்த கேரள மக்கள்!

Published on 07/01/2020 | Edited on 08/01/2020

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், நாடு முழுவதும் இதனை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது. 



இந்நிலையில், கேரளா மாநில பாஜகவினர் குடியுரிமை சட்டத்தை விளக்கி வீடுவீடாக பிரச்சாரம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரள மக்கள் ஏற்கனவே தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், தங்கள் வீடுகளுக்கு முன்பு பாஜகவினருக்கு எதிராக தற்போது நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்காக தங்களின் வீடுகளின் முன்பு அவர்கள் போர்டுகளை வைத்துள்ளனர்.  அதில் " குடியுரிமை சட்டத்திற்காக பாஜகவினர் யாரும் எங்கள் வீட்டிற்கு வர வேண்டாம்" என்று தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
 

 

சார்ந்த செய்திகள்