Advertisment

'வேளாண் சட்டங்களை திரும்ப பெறுக' - தீர்மானம் நிறைவேற்றியது கேரளா!

kerala assembly

Advertisment

மத்திய அரசின்புதியவேளாண் சட்டங்களுக்கு எதிரானபோராட்டங்கள் 36வது நாளாக தொடர்ந்து வருகிறது. நேற்று விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும்இடையே நடைபெற்ற6ஆம் கட்ட பேச்சுவார்த்தை, திருப்தியளிக்கும் வகையில்இருந்ததாகமத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் ஜனவரி4ஆம் தேதி நடைபெறும்எனவும்மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், வேளாண் சட்டங்களைத்திரும்ப பெறக் கோரிகேரளசட்டசபையில் அம்மாநில அரசு தீர்மானம் கொண்டுவந்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராககொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், விவசாயிகளின் நியாமானகவலைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் எனகூறப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரானதீர்மானத்தைகொண்டுவந்த கேரளமுதல்வர் பினராயிவிஜயன், "விவசாயிகளின்போராட்டம் தொடர்ந்தால், அது கேரளாவைக் கடுமையாக பாதிக்கும் என்பதை தற்போதைய நிலைமை தெளிவாக கூறுகிறது. பிற மாநிலங்களிலிருந்து உணவு பொருட்கள்வருவது நிறுத்தப்பட்டால், கேரளா பட்டினியால் வாடும் என்பதில்எந்த சந்தேகமும் இல்லை" எனகுறிப்பிட்டார்.

Advertisment

ஏற்கனவே வேளாண்சட்டங்களுக்கு எதிராகடெல்லிமாநிலஅரசும், தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

cm pinarayi vijayan farm bill Farmers Protest Kerala
இதையும் படியுங்கள்
Subscribe