Skip to main content

பாதிரியார் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்த கன்னியாஸ்திரி 

Published on 30/06/2018 | Edited on 30/06/2018

கேரள மாவட்டம் கோட்டயத்தில் உள்ள கன்னியாஸ்திரியை பாதிரியார் ஒருவர் 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது, அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

church

 

 

 


பிராங்கோ முலக்கல் என்பவர் ரோமன் கத்தோலிக்க ஜலந்தர் டயோசீஸின் பிஷப் ஆவார். இந்த டயோசீஸுக்குகீழ் கோட்டயத்தில்  கான்வென்ட் உள்ளது, அதை கன்னியாஸ்திரி ஒருவர் கவனித்து வந்துள்ளார். பிராங்கோ என்ற பிஷப் அவரை மிரட்டி 13முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கோட்டயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

 

 

 

பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி அளித்த புகாரில்," குருவிலங்காட்டில் உள்ள விருந்தினர் மாளிகை ஒன்றில் முதன்முதலாக பாலியல் வன்கொடுமை செய்தார். இதேபோல 13முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சர்ச் நிர்வாகத்திடம் புகார் அளித்தேன், அவர்கள் நடவடிக்கையே எடுக்கவில்லை. அதனால் காவலர்களிடம் புகார் அளித்துள்ளேன்" என்றார். இந்தப் புகார் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கன்னியாஸ்திரி மீது பிஷப் முல்லக்கலும் புகார் அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டது," கன்னியாஸ்திரியை பணிஇடை மாற்றம் செய்ததால் என்மீது பழிவாங்கும் நோக்கிலேயே அவர் இவ்வாறு செய்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

இதுபற்றி காவல் அதிகாரி ஹரிசங்கர் கூறுகையில், "இருவரும் மாறி,மாறி புகார் கொடுத்துள்ளனர். அதுபற்றி விசாரிக்க சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளோம்" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்