கேரள மாநிலம் எர்ணாகுளம் நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் ஹிபி ஈடனின் மனைவி அன்னா லிண்டா. இவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவ் மோடில் இருப்பவர். இந்நிலையில் நேற்று தன்னுடைய முகப்புத்தகத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில் வெள்ளம் சூழ்ந்த ஒரு படத்தை ஒருபுறமும், ஒருவர் ஐஸ் கிரீம் சாப்பிடும் படத்தை இன்னொரு புறமும் இணைத்து அந்த புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்துக்கு கீழே அன்னா லிண்டா, " இப்படித்தான் விதி என்பது கற்பழிப்பு போல, எதிர்த்து போரிட முடியாதபோது அனுபவித்துவிட வேண்டியதுதான்" என்று சர்ச்சை பதிவினை போட்டிருந்தார்.

Advertisment

jnk

ஆனால் கற்பழிப்பு என்பது விதி அல்ல ஆணாதிக்கம் என்றும், வெள்ளம் சூழுவது இயற்கை அல்ல, சில சமயம் ஆட்சியாளர்கள் சரியில்லை என்றாலும் நிகழும் என்றும் கொந்தளித்திருந்தனர் இணையவாசிகள். இதனையடுத்து அப்பதிவை நீக்கிய அன்னா லிண்டா, சோகமான ஒரு சம்பவத்தை எதார்த்தமான நகைச்சுவை உணர்வோடு கடந்து செல்லும் எண்ணத்திலேயே அப்பதிவினை போட்டதாகவும், ஆனால் அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் கூறி வருத்தம் தெரிவித்து மற்றுமொரு போஸ்டினை பதிவிட்டுள்ளார்.

nkl