Skip to main content

கேரளாவிலும் அமைச்சர்களுக்கு  சம்பள உயர்வு...

Published on 29/03/2018 | Edited on 29/03/2018
கேரள எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்களுக்கு  சம்பள உயர்வு 

கடந்த செவ்வாயன்று கேரள சட்டசபையில் ஒரு சட்ட மசோதா திருத்தப்பட்டு நிறைவேற்றபட்டது. இந்த மசோதாவானது மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர், பிரதி சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தலைமை விப்ளர் ஆகியோரின் சம்பளத்தை ஏப்ரல் 1 முதல் இரண்டு மடங்காக அதிகரிக்க கொண்டுவரப்பட்டதாகும்.
இதன்படி அமைச்சர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இப்போது 55,000 ரூபாயிலிருந்து 90,000 ரூபாயாக அதிகரிக்கும். எம்.எல்.ஏக்களின் சம்பளம் 39,500 ரூபாய் முதல் 70,000 வரை அதிகரிக்கிறது. அதுமட்டும்மல்லாமல் இந்தியாவிற்குள்  எம்.எல்.ஏக்கள் விமானங்களில் சட்டமன்ற அமர்வுகள் மற்றும் குழு கூட்டங்களில் மட்டும் பங்குபெறுவதற்கான பயணத்திற்கு மட்டும் 50,000ஆயிரம்  ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமசோதா திருத்தத்தினால் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு அளிக்கப்படும் நிதியானது  12,000 ரூபாயிலிருந்து, மாதத்திற்கு 25,000 ரூபாயாகவும்,  அமைச்சர்களின் தொகுதிகளுக்கு 12,000 ரூபாயிலிருந்து 40,000 ஆயிரமாக அதிகரிக்கும். தொலைபேசி கட்டணம் 7,500லிருந்து 11,000ஆயிரமாக அதிகரித்துள்ளது. அலுவலகம் வாடகைக்கு 3000லிருந்து 8000 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  ஓய்வுபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தில் ஆயிரம் ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்றாற்போல் 35,000 முதல் 50,00வரை வழங்கப்படுகிறது. இந்த புதிய சட்டமசோதா திருத்தத்தால் அரசுக்கு கூடுதலாக 5.25கோடி செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்