kerala medical student dance

Advertisment

கேரளாவின் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரியின்மாணவர்நவீன் கே ரசாக் மற்றும் மாணவி ஜானகி ஓமகுமார்.இவர்கள்இருவரும்நடனமாடி அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டு இருந்தனர். இது பலரையும் கவர்ந்தது. தொடர்ந்து இந்த வீடியோ வைரலாகியது.

அதேநேரத்தில்இந்த வீடீயோவைசுற்றி சர்ச்சைகளும் எழுந்தன. குறிப்பாக வழக்கறிஞர் ஒருவர் மாணவர் நவீன் ரசாக்கின் மதத்தை தொடர்புபடுத்தி இருவரது நடனத்திற்குப் பின் லவ் ஜிகாத் இருக்கலாம்எனவும்,மாணவி ஜானகி வீட்டார் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் பதிவிட்டார். இதுபோன்ற வெறுப்பை விதைக்கும் பதிவுகளுக்குப் பதிலடி தர விரும்பிய திருச்சூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், அதற்கு நடனத்தையே வழியாகத் தேர்ந்தெடுத்தனர்.

திருச்சூர் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் நவீன் மற்றும் ஜானகி ஆடிய பாடலுக்கு, நடனமாடி "வெறுப்பது உங்கள் திட்டம் எனில், அதை எதிர்ப்பது எங்கள் முடிவு" என்ற தலைப்போடு சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். மாணவர்கள் நடனமாடிய வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. மாணவர்களின் இந்தப் பதிலடிக்கு வரவேற்பும் குவிந்து வருகிறது.