Advertisment

நாட்டின் இளம் மேயருக்கும் கேரளாவின் இளம் எம்.எல்.ஏவுக்கும் திருமணம்

Kerala mayor Arya Rajendran wedding

கேரளாவில் 2021ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தலைநகரமான திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு மேயராக கல்லூரி மாணவியான ஆர்யா ராஜேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியாவின் இளம் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிறந்த நிர்வாக திறமையால் மக்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றுவரும் ஆர்யா ராஜேந்திரன், மா.கம்யூனிஸ்ட் பிரிவான பாலசங்கத்தின் மாநில தலைவராகவும், இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினராகவும் உள்ளார்.

Advertisment

இவருக்கும் கோழிக்கோடு பாலசேரி சட்டமன்ற தொகுதியின் மா.கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏவான சச்சின் தேவ் என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் கடந்த 5 மாதத்துக்கு முன் நடந்தது. சச்சின் தேவ் கேரளா சட்டசபையின் இளம் வயது எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய மாணவர் சங்க மாநில செயலாளராகவும் தேசிய இணைச் செயலாளராகவும் சச்சின் தேவ் உள்ளார்.

Advertisment

ஆர்யா ராஜேந்திரனும் சச்சின் தேவும் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை கொண்டுள்ளவர்கள். நாளை 4-ம் தேதி கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகமான திருவனந்தபுரம் ஏகேஜி சென்டரில் நடக்கும் திருமணத்தை முதல்வர் பினராய் விஜயன் தலைமை ஏற்று நடத்தி வைக்கிறார்.

திருமணத்தில் கேரளா அமைச்சர்கள், கம்யூனிஸ்ட் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவா்கள் கலந்து கொள்கின்றனா். மேலும் திருமணத்துக்கு வருகை தருபவா்கள் பரிசு பொருட்களை தவிர்ப்பதோடு பரிசு பொருட்களுக்கான தொகையை முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்துக்கும், முதல்வரின் நிவாரண நிதிக்கும் கொடுக்கும்படி மணமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Kerala mayor
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe