kerala man arrested for hunting snakes

Advertisment

கேரளாவில் சாரைப் பாம்பை பிடித்துச் சமைத்து மலைப்பாம்பு கறி என விற்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் வனச்சரகத்திற்கு உள்பட்ட பகுதியில் பாம்புகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு அண்மையில் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர் நேரியமங்கலத்தை சேர்ந்த வி.ஜே. பிஜூ என்பவரை நேற்று கைது செய்தனர்.

அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சாரைப்பாம்புகளை பிடித்து சமைத்துசாப்பிடுவதோடு, அதனை மலைப்பாம்பு கறி எனக்கூறி விற்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். 1972 வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி, சாரைப்பாம்பு பாதுகாக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, இதை துன்புறுத்துவது, அடித்துக் கொல்வது சட்டப்படி குற்றம் என்பதால், பிஜு மீது வழக்கு பதிவுசெய்து,சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.