Kerala madhu case! Bargain for money to save criminals!

Advertisment

கேரளா மாநிலம், பாலக்காடு அட்டப்பாடி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மது, பசிக்காக 2018 பிப்ரவரி 22-ம் தேதி முக்கலி பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து உணவு திருடியதாக கூறி அவரை கையும், காலையும் கட்டி தரையில் இழுத்து சென்று அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய பழங்குடி ஆணையம், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கேரளா காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள், கார் டிரைவர்கள் உட்பட 16 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தனர். இதில் முக்கிய குற்றவாளிகளான கார் டிரைவர் சம்சுதீன், வியாபாரிகளான ஹீசைன், முனீர் ஆகியோர் முதல் மூன்று குற்றவாளிகளாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டியிருந்தது. மேலும் உடம்பில் 15 இடங்களில் ஏற்பட்ட கொடுங்காயங்களால் தான் மது உயிரிழக்க நோ்ந்ததாக உடற்கூராய்வு அறிக்கையிலும் கூறப்பட்டியிருந்தது.

இந்த நிலையில் 4 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த கொலை வழக்கில் சாட்சிகளை திசை திருப்பி முக்கிய குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், இதன் பின்னணியில் போலீசார் ஈடுபட்டிருப்பதாகவும் 3 மாதத்துக்கு முன் மதுவின் சகோதரி சரசு நீதிமன்றத்தில் கண்ணீருடன் கூறினார். இந்த நிலையில் அந்த முக்கிய குற்றவாளிகளுக்கு நெருக்கமானவர்கள், அடிக்கடி வந்து வழக்கில் இருந்து பின் வாங்க பணம் பேரம் பேசுவதாகவும் அதற்கு உடன்படாததால் தங்களை தொடா்ந்து மிரட்டி வருவதாகவும் மதுவின் தாயார் மல்லி பாலக்காடு மாவட்ட ஆட்சியர் முன்மயி ஜோஷியிடம் புகார் கொடுத்துள்ளார். மேலும் எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்றனா் மதுவின் குடும்பத்தினா்.

Advertisment

இதையடுத்து குற்றவாளிகள் ஓருத்தரையும் தப்ப விடக்கூடாது அத்தனை பேருக்கும் நீதிமன்ற தண்டனை வழங்க வேண்டுமென்று காங்கிரசார் கூறியுள்ளனா்.