Advertisment

பெட்டி முடியில் 5 வது நாளாக மீட்புப்பணி... உயிரிழப்பு 49 ஆக உயர்வு!!

kerala lanslide... recovery on the 5th day

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், 3 தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் கேரளா மாநிலம் மூணாறு அருகே பெட்டி முடிப் பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் நிலச்சரிவு ஏற்பட்டது.

Advertisment

இந்த நிலச்சரிவில் 80 பேர் சிக்கிய நிலையில்,நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.உயிருடன் மீட்கப்பட்டவர்களுக்கு மூணாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 20 தோட்ட தொழிலார்களின் வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. தற்பொழுது மீதமுள்ள நபர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றது. மீதமுள்ள 20 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பெட்டி முடி பகுதியில் கடந்தநான்கு நாட்களாக மீட்பு பணி நடைபெற்று வந்த நிலையில், 5 ஆவது நாளான இன்றும் தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. அதேபோல் அப்பகுதி மக்கள் இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisment

weather landslide Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe