Skip to main content

மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்வு!

Published on 10/08/2020 | Edited on 10/08/2020

 

ரகத

 

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து வரும் நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் கேரளா மாநிலம் மூணாறு அருகே பெட்டி முடிப் பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில்  தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில்  நிலச்சரிவு ஏற்பட்டது. 

 

இந்த நிலச்சரிவில் 80 பேர் சிக்கிய நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூணாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 20 தோட்ட தொழிலார்களின் வீடுகள் முழுமையாகச் சேதம் அடைந்துள்ளது. தற்பொழுது மீதமுள்ள நபர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்; மீட்கும் பணியில் ஏற்பட்ட சோகம்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Labor trapped in landslide in chennai

சென்னை, கிழக்கு தாம்பரம் அருகே ஆதிநகர் பகுதி ஒன்று உள்ளது. இங்கு, தாம்பரம் மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனம் மூலம் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. பாதாள சாக்கடைக்கான பள்ளம் தோண்டி பைப்லைன் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று (16-03-24) மாலை திடீரென பள்ளத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், திட்டக்குடியைச் சேர்ந்த தொழிலாளர் முருகானந்தம் என்பவர் மண் சரிவில் சிக்கினார். இந்த சம்பவம் குறித்து அங்குள்ளவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், மண் சரிவில் சிக்கியிருந்த முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

அதில், ஜே.சி.பி வாகன உதவியுடன் தீயணைப்புத் துறையினர், முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது தலை மட்டும் வந்துள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, முருகானந்தனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மண் சரிந்து விபத்து; மூன்று பேர் மீது வழக்குப் பதிவு

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
landslide accident; Case registered against three persons

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள காந்தி நகரில் பிஜ்லான் என்பவர் வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். இதற்காக 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த வீட்டிற்கான கட்டுமான பணியின் போது வீட்டின் பக்கவாட்டு பகுதியில் மண்ணை வெட்டி எடுத்தபோது 30 ஆண்டுகள் பழமையான கழிவறை இடிந்து விழுந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த மண் சரிவில் 8 பேர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் மண் சரிவில் சிக்கிய 8 பேரில் 6 பெண்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுமான பணியின்போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து  இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்த ஆறு பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார். காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், இந்த சம்பவத்தில் மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டட உரிமையாளர் பிரிஜ்ஜோ, பொறியாளர் ஜேக்கப் மேத்யூ மற்றும் ஒப்பந்ததாரர் ஜாஹீர் அகமது ஆகிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூவரும் ரகசிய இடத்தில் வைத்து போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் நீலகிரியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்டுமான துறையில் விதிமீறல்கள் இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.