Advertisment

கேரளாவில் நடந்த வினோத திருவிழா; பெண் வேடத்தில் வந்த ஆண்கள்

kerala kollam kulakara devi temple festival viral

Advertisment

கேரளாவில் உள்ள கோவில் ஒன்றில் ஆண்கள் தங்களைஅலங்காரம் செய்து கொண்டுபெண் தோற்றத்தில் பங்கேற்கும் திருவிழா நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ளகொட்டம் குளக்கரா தேவி கோவிலில் ஆண்டுதோறும் மலையாள மீனம் மாதத்தில் சமயவிளக்கு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான ஆண்கள் தங்களை பெண்கள் போன்று அலங்காரம் செய்து கொண்டு பங்கேற்கின்றனர். இதனை ஒரு வேண்டுதலாக கருதி அதனை நிறைவேற்றி வருகின்றனர். இதன் மூலம் தங்களது வீடுகளில் செல்வம் பெருகும் என்பது அவர்களின்நம்பிக்கையாக உள்ளது.

அவ்வாறு பெண் போன்றுஅலங்காரம்செய்து கோயிலுக்குவரும் ஆண்கள், கோயிலில் ஐந்து முக விளக்கை ஏற்றி இரவு முழுவதும் கோயிலை வலம் வந்து கடவுளை வழிபடுகின்றனர். இதில் சிறப்பாக அலங்காரம் செய்த ஆண்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Festival Kerala kollam temple VIRAL
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe