Advertisment

இறந்து ஒரு மாதத்திற்கு பிறகு புதைக்கப்பட்ட பெண்!!!

கேரள மாநிலம் கொல்லம் அருகேயுள்ள குன்னத்தூர் தாலுகாவைச் சேர்ந்த அன்னம்மா என்பவர் ஜெருசலேம் மார்த்தோமா ஆலயத்தில் உறுப்பினராக இருந்துள்ளார். 75 வயதான இவர் கடந்த மே 13ம் தேதி காலமானார். அவர் தனது மகனைப் புதைத்த இடத்தில்தான் தன்னையும் புதைக்கவேண்டும் என முன்பு கூறியுள்ளார்.

Advertisment

annama kerala

இதன்படி அவரைப் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் அவரை அங்கு புதைக்கக்கூடாது. அங்கு இருக்கும் நீராதாரம் அசுத்தமாகும் என்றுகூறி தடுத்துள்ளனர். ஆனால் அவரது குடும்பத்தினர் இது அவரின் கடைசி ஆசை அவரை அங்குதான் புதைக்கவேண்டும் எனக்கூறியுள்ளனர். இந்நிலையில் அவரது உடல் புதைக்காமலேயே வைத்திருந்தனர்.

Advertisment

இந்நிலையில் மாவட்ட மருத்துவ அலுவலர் அந்த இடத்தை பார்வையிட்டார். அதன்பிறகு அந்த இடத்தை சிறிது மாற்ற, அதாவது அந்த உடலால் நீர் மாசு அடையாமல் இருப்பதற்கான வழிமுறைகளை காட்டினார். பின்னர் அந்த உடல் ஒரு மாதத்திற்கு பிறகு அவரது விருப்பப்படியே அதே இடத்தில் இன்று(ஜூன் 13)புதைக்கப்பட்டது.

burial woman Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe