Advertisment

15 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் யூத முறைப்படி நடந்த திருமணம்

kerala marriage viral video

கேரளாவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு யூத முறைப்படி திருமணம் ஒன்றுநடைபெற்றுள்ளது.

Advertisment

கேரள மாநிலம்கொச்சியை சேர்ந்த ரேச்சல் என்றபெண்ணிற்கும்அமெரிக்காவை சேர்ந்த ரிச்சர்ட் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இவர்களின்திருமணமானதுயூத முறைப்படி நடத்த அவர்களது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி தற்போது கேரளாவின் மட்டன் ஜெர்ரியில் உள்ள யூதர்களின் பாரம்பரிய புனிதத்தலமான சினே கொக்கியோவில் சிலரை மட்டும் அனுமதிக்க முடியும் என்பதால் எளிதான முறையில் திருமணம்நடைபெற்றது.இந்த திருமண விழாவில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து அங்குள்ள தனியார் நட்சத்திர விடுதியில் யூத முறைப்படி அனைத்துபாரம்பரியசடங்குகளுடன் இந்த திருமணம் நடைபெற்றது.

Advertisment

கேரளாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த யூத முறைப்படி திருமணம் நடைபெற்ற பிறகு 15 ஆண்டுகள் கழித்து தற்போது தான் யூத முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் கடந்த 70 ஆண்டுகளில் யூத முறைப்படி கேரளாவில்நடைபெறும்5வது திருமணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த திருமணமானது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இந்த திருமணம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில்மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Kerala marriage
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe